பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு கூடுதல் டேட்டா நன்மைகளை வழங்கும் நோக்கத்தின் கீழ் தனது அபினந்தன் ரூ.151/- திட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது.
கடந்த மாதம் அறிமுகமான இந்த பிஎஸ்என்எல் திட்டமானது, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 1 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை மொத்தம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கி வந்தது.
தற்போது இந்த திட்டத்தின் டேட்டா நன்மையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இனி இந்த திட்டத்தின் கீழ், தினமும் 1 ஜிபி அளவிலான டேட்டாவிற்கு பதிலாக 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த புதிய திருத்தமானது, அனைத்து பிஎஸ்என்எல் வட்டங்களிலும் உருட்டபப்ட்டுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவின் 1.5 ஜிபி திட்டமானது ரூ.149/-க்கும் (28 நாட்கள்) மற்றும் 2ஜிபி திட்டமானது ரூ.198/-க்கும் (28 நாட்கள்) தொடங்குவதால், அதற்கு சரியான போட்டியாக அமையும் வண்ணம் அபிநந்தன் திட்டத்தில் திருத்தம் நிகழ்த்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அபினந்தன் திட்டத்தின் இந்த புதிய திருத்தமானது, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கம் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பை வட்டங்கள் உட்பட எந்தவொரு நெட்வொர்க் உடனாகவும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழைப்பு நன்மைகளை வழங்கும் இந்த ரூ.151/- திட்டமானது அதன் செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 36 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். தினசரி வரம்பான 1.5 ஜிபி என்கிற அளவை அடைந்த பிறகு, இணைய வேகமானது 40 கேபிபிஎஸ் ஆக குறையும்.
கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று அறிமுகமான இந்த திட்டமானது, அடுத்த 90 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு விளம்பர சலுகை ஆகும். இந்த திட்டம் புதிய, இடம்பெயர்ந்த மற்றும் ஏற்கனவே உள்ள பிஎஸ்என்எல் இணைப்புகளுக்கும் பொருந்தும்.
அரசினால் நடத்தப்படும் இந்த டெலிகாம் நிறுவனமானது, சமீபத்தில் அதன் புதிய ரூ.1,188/- மருதம் நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்ததும், அந்த திட்டத்தின் கீழ் 5 ஜிபி டேட்டா, மும்பை மற்றும் டெல்லி வட்டங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள எந்தவொரு நெட்வொர்க் உடனான வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், செல்லுபடியாகும் 345 நாட்களுக்கும் மொத்தம் 1200 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source: Tamil.Samayam.com
Copyright: www.Tamil.Samayam.com
ThankYou:Samayam.com
No comments:
Post a Comment