31 Jul 2019

இந்திய கடற்படையில் டிரைவர் வேலை: ரூ.63 ஆயிரம் சம்பளம்







இந்திய கடற்படையில் 104 சிவிலியன் மோட்டார் டிரைவர் (Civilian Motor Driver Ordinary Grade) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும் விருப்பமும் கொண்டவர்கள் இந்தியக் கடற்படையில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்யலாம்.

விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களையும் இணைத்து ஆந்திராவில் உள்ள கடற்படை அலுலவகத்துக்கு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி பின்வருமாறு,

மேற்கண்ட முகவரிக்கு அனுப்பப்படும் விண்ணப்பத்தின் உறையிபல் எந்த பணிக்கான விண்ணப்பம் என்றும் இந்த பிரிவைச் சேர்ந்தவர் என்றும் தெளிவாகக் குறிப்பிட்ட வேண்டும். ஸ்பீட் போஸ்ட் அல்லது பதிவுத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்து, first line maintenance குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும். கனரக மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனங்களை ஓட்டுவதில் குறைந்தபட்சம் ஓர் ஆண்டு அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்தியக் கடற்படையில் டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம்.

சம்பளம்

கடற்படையில் இந்த டிரைவர் பணியில் சேரும் நபர்கள் லெவல் 2 பணியாளர்களுக்கான சம்பளம் பெறுவர். அதாவது, குறைந்தபட்சம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

இந்த வேலை வாய்ப்பு பற்றிய மேலும் விவரங்களை, https://www.joinindiannavy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம் அல்லது கீழ்க்காணும் இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தைப் டவுன்லோட் செய்து பார்க்கலாம்.
http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_96_1920b.pdf


Source: Tamil. Samayam. Com
Copyrighted: Tamil.Samayam.com
ThankYou: Tamil.Samayam. com

No comments:

Post a Comment