மத்திய அரசு சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு சிறுபான்மையினராக அறிவித்த முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம்.
2019-2020 கல்வி ஆண்டில் இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை, 11ஆம் வகுப்பு முதல் முனைவர் பட்ட ஆய்வு வரை என இரு பிரிவுகளாகவும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு தனி பிரிவிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி மாணவர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த கல்வி உதவித்தொகையைப் பெற https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பள்ளிப் படிப்புக்கான உதவித்தொகை பெற அக்டோபர் 15, 2019 வரை விண்ணப்பிக்கலாம். பள்ளி-மேற்படிப்பு மற்றும் தகுதி-வருவாய் அடிப்படையிலான உதவித்தொகை பெற அக்டோபர் 31, 2019 வரை விண்ணப்பிக்கலாம்.
ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்துக்கும் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் பரிசீலனைக்கே உட்படாது. புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் உதவி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கல்வி உதவித்தொகை தொடர்பான விரிவான விவரங்கறை அறிய,
http:www.bcnbcnw.tn.gov.in/welfsmesminorities.htm என்ற இணையப் பக்கத்துக்குச் செல்லலாம்.
Source: Tamil.Samayam.com
Copyright;: Tamil.Samayam. com
Article: Tamil.Samayam. com
ThankYou: Tamil.Samayam. com
No comments:
Post a Comment