இந்த ஆண்டின் முதல் ஓநாய் சந்திர கிரகணம் ஜன.10 இரவு 10 மணிக்கு துவங்குகிறது
இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகில் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் இதைப் பார்க்க முடியும். ஆனால், அமெரிக்காவில் இதைப் பார்க்க முடியாது.
இந்த ஆண்டு மட்டும் இதுபோன்று நான்கு சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன.
பொதுவாக சந்திர கிரகணத்தின்போது, சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். ஆனால், இன்று நிகழப்போகும் சந்திர கிரகணத்தில் இந்த மூன்றும் அவ்வாறு நேர்கோட்டில் இருக்காது. சூரியனின் கதிர்கள் பூமி மீது விழுந்து பூமியின் அரைநிழற் பகுதியில் நிலவு வரும். இதனை ஆங்கிலத்தில் Penumbral Lunar Eclipse என்கிறார்கள்.
Penumbral Lunar Eclipse அன்று முழு நிலவாக இருந்தால் இதைத்தான் ஓநாய் சந்திர கிரகணம் என்கிறார்கள். கிரகண சமயத்தில் நாம் எப்போதும் பார்க்கும் வண்ணத்தில் நிலவு இருக்காது. அதனால்தான் இந்த கிரகணம் சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது.Read Full👉
Source: BBC
Rights:BBS
No comments:
Post a Comment