3 Jul 2019

புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றுவதில் சிக்கல்: மன்னிப்பு கோரிய பேஸ்புக் நிறுவனம்!



உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் முகநூல், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை உபயோகித்து வருகின்றனர். இந்த அப்ளிகேசன்கள் அனைத்தையும் ஃபேஸ்புக் நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது. அதனால் இவற்றில் ஒன்றில் சர்வர் சிக்கல் மற்ற இரண்டையும் பாதிக்கிறது.

இன்றும் முகநூல், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பார்க்கமுடியாத பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஏற்பட்ட இந்த பிரச்சனையால் நெட்டிசன்கள் கடுப்பாகி பேஸ்புக் நிறுவனத்தை திட்டி வருகின்றனர்.
இதனிடையே பேஸ்புக் நிறுவனம் இந்த சிக்கலுக்கு தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக மன்னிப்பு கோரியுள்ளது. அதில்’ சில நபர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் இதர ஃபைல்களை தங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் மற்றும் இந்த சிக்கலை உடனடியாக தீர்த்து மீண்டும் இயல்பு நிலைக்கு வர அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூல், வாட்ஸ் ஆப் சமூக வலைதளங்களில் இன்று மாலை முதல், புகைப்படங்களை பதிவேற்ற முடியாமல் பயனாளர்கள் குழம்பிய வண்ணம் இருந்தனர். தங்களுக்கு மட்டும்தான் இந்த பிரச்சனை உள்ளது என ஏராளமானோர் நினைத்திருந்தனர். ஆனால் உலகம் முழுவதும் இப்படி ஒரு சிக்கல் இருந்து வந்தது பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட டுவீட் மூலம் தெரியவந்துள்ளது.

Source: Tamil.Samayam. com
Copied: Tamil.Samayam.com

No comments:

Post a Comment