ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பணபாக்கத்தை சேர்ந்த மாணவி ஒருவர், சந்திரகிரியில் உள்ள அரசு பத்மாவதி உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தாய் இறந்துவிட்ட நிலையில், தந்தையும் மாற்றுத்திறனாளி என்பதால், அவள் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார்.
சந்திரகிரியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வரும் அந்த மாணவி கோடை விடுமுறைக்காக சொந்த ஊரான பணபாக்கத்திற்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் வீட்டில் அந்த மாணவி குளித்துக்கொண்டிருந்த போது அதே ஊரை சேர்ந்த மோகன் என்ற மைனர் சிறுவன்,
மறைந்திருந்து தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். மேலும் வீடியோவை காண்பித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தான். மேலும் வீடியோவை தன்னுடைய நண்பர்களான நாகார்ஜுனா, பார்த்தசாரதி, சக்கரவர்த்தி,ஜெகபதி ஆகியோருக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தான்.
மோகன் அனுப்பிவைத்த வீடியோவை மாணவியிடம் காண்பித்த 4 பேரும் தங்களுடைய ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினர். இல்லையென்றால் வீடியோவை முக நூலில் பதிவேற்றம் செய்வோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். பேத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயல்வதை கவனித்த அவருடைய பாட்டி, பேத்தியை தற்கொலை முயற்சியில் இருந்து மீட்டு என்ன நடந்தது என்று விசாரித்தார்.
மாணவி நடந்த சம்பவங்களை பாட்டியிடம் கூற, கிராம மக்களின் ஒத்துழைப்புடன் சந்திரகிரி காவல் நிலையத்தில் பாட்டி புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து சிறுவர்களையும் கைது செய்து, அவர்களுடைய செல்போன்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஐந்து பேர் மீதும் போலீசார் நிர்பயா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Source: Tamil.Samayam.com
Copied: Tamil.Samayam.com
No comments:
Post a Comment