11 Sept 2019

Apple TV+ India: வெறும் ரூ.99க்கு இந்தியாவில் ஆப்பிள் டிவி+ சந்தா; அசத்தும் ஆப்பிள்!


ஆப்பிள் டிவி ப்ளஸ்-ன் இந்திய விலை நிர்ணயம் மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐபோன் தயாரிப்பாளரின் இந்த ஸ்ட்ரீமிங் சேவையானது ஒரு வார இலவச சோதனைக்குப் பிறகு மாதத்திற்கு ரூ. 99 என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் உலகளவில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் நவம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் ஆகிறது.
யாருக்கெல்லாம் இலவசமாக ஒரு வருட சந்தா கிடைக்கும்?
மேலும் புதிய ஐபோன், ஐபாட்,
ஆப்பிள் டிவி, , மேக் அல்லது ஐபாட் டச் வாங்குபவர்களுக்கு ஒரு வருட காலம் இலவச ஆப்பிள் டிவி+ சந்தா கிடைக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் ஆப்பிள் டிவி+ ஆனது எந்தவிதமான கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் ‘Family Sharing’ உடன் இணக்கமாகதாக இருக்கும், அதாவது மொத்தம் ஆறு நபர்கள் - நீங்கள் உட்பட - அனைத்து ஒரிஜினல் சீரிஸ் தொடர்களையும் படங்களையும் - அனைத்து ஆதரவு சாதனங்களின் வழியாகவும் - அணுக முடியும்.

ஆப்பிள் நிறுவனம் இதுவரையிலாக, ஆப்பிள் டிவி+ உள்ளடக்கத்தின் மீது 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 43,040 கோடி) முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் நெட்ஃப்லிக்ஸ் (15 பில்லியன் டாலர்) மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ (7 பில்லியன் டாலர்) செய்யும் முதலீடுகளை விட மிகவும் குறைவு தான் என்றாலும் கூட, பாராட்ட்டதக்க ஒன்றாகவே பார்க்க்கப்படுகிறது.

நிறுவனத்தை ,பொறுத்தவரை, ஆப்பிள் டிவி+ என்பது அதன் வணிகத்தின் ஒரு சிறிய பகுதியே ஆகும். அதன் மிகப்பெரிய வருமானம் ஆனது ஆப் ஸ்டோர் வழியாகவே தொடர்கிறது. ஐபோன் பயனர்கள் நிகழட்டும் கொள்முதல் மற்றும் சந்தாக்களுக்கு நன்றி. அதற்கு அடுத்தபடியாக ஆப்பிள் மியூசிக், ஐடியூன்ஸ் கொள்முதல்கள், ஐக்ளவுட் சேமிப்பு மற்றும் ஆப்பிள் பே ஆகியவைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Source: Tamil.Samayam. com
Copy:Tamil.Samayam. com
Article: Tamil. Samayam. Com
ThankYou:Tamil.Samayam.com

No comments:

Post a Comment